18 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய தம்பதி நேர்ந்த கதி!
18 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய தம்பதியை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் இருந்து 1 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தம்பதியரை மாவத்தகம, பிலஸ்ஸ பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 18 கடவுச்சீட்டுக்கள், 1 மடிக்கணினி, 1 டெப்லெட், 3 அலைபேசிகள் மற்றும் பிரின்டர் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார், தெரிவித்தனர். பிலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 24 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்கள் கைது செய்யப்பட்ட போது, மூன்று புதிய கடவுச்சீட்டுகளில் வெளிநாட்டு விஸாக்கள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த தம்பதிக்கு எதிராக நிக்கவெரட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மஹவ நீதவான் நீதிமன்றத்தில் 8 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் , அனைத்து வழக்குகளுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைதான தம்பதியினரை பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.