பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தம்பதியினர் மேற்கொண்ட மோசமான செயல்!
களுத்துறையில் உள்ள பகுதியொன்றில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தம்பதியினர் பெண் பொலிஸ் அதிகாரியின் பணப்பையை திருடிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையம் சென்ற தம்பதியினரே இவ்வாறான செயிலில் ஈடுபட்டுள்ளனர்.

வாதுவ குரே மாவத்தையில் வசிக்கும் கணவன், மனைவி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவதற்காக வாதுவ பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடுகள் பிரிவிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மேசையிலிருந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் பணப்பையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.