பைக்கில் சாகசம் செய்யமுயன்ற காதல் ஜோடிக்கு கடைசியில் நேர்ந்த பரிதாபம்!
பைக்கில் சாகசம் செய்யமுயன்ற காதல் ஜோடி ஒன்று திடீரென நிலைதடுமாறி விழுந்த பதைபதைப்பை ஏற்படுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பிடித்த விஷயமாகி போனாலும், சில நேரங்களில் அது ஆபத்தில் கொண்டுப்போய் சேர்த்துவிடும் சம்பவங்கள் பதிவாகி விடுகின்றன.
வைரலாகும் காணொளி
இதன் காரணமாகவே போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சாகசம் செய்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. பைக்கில் வேகமாக செல்லும் இளைஞரை பின்னால் இருக்கும் அவரது காதலி கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார்.
JAB WE MET with an accident due to reckless driving.#DriveSafe@dtptraffic pic.twitter.com/adfwIPtHlX
— Delhi Police (@DelhiPolice) June 28, 2023
அப்போது வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை.
சமூகவலைத்தளவாசிகள் பாராட்டு
இந்த காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து பொலிசார் அந்த ஜோடியை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டனர்.
அதில், நாங்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கு உள்ளானோம். எனவே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில், டெல்லி பொலிசாரின் நடவடிக்கைக்கு சமூகவலைத்தளவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.