தம்பதியருக்கு அதிர்ச்சி கொடுத்த இ.போ.ச பேருந்து ; பரிதாபமாக பிரிந்த உயிர்
மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியில், கொந்தெனிய சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் வேன் சாரதி, அவரது மனைவி மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்து, மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், வேன் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலதிக விசாரணை
கேகாலையிலிருந்து மாவனெல்லை நோக்கி பயணித்த வேன் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர் கடுகன்னாவை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் மாவனெல்லை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.