போதை பொருளுடன் தம்பதியினர் கைது
சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்பதியினர் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவனும் மனைவியும் அத்திடிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஹெரோயின் பொதி செய்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு சந்தேக நபர்கள் 35 மற்றும் 37 வயதுடைய தம்பதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பொதியிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல சாதனங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணத்திலிருந்து 41,000 ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றிவளைக்கப்பட்ட போது, கணவனும் மனைவியும் வீட்டிற்குள் போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.