தென்னிலைங்கையில் மோசடியில் ஈடுபட்ட தம்பதி அதிரடியாக கைது
ஹொரணை, போருவதன்ட பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
இதன்போது, குறித்த கச்சேரியிலிருந்த பல்வேறு போலி ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போலியாக தயாரிக்கப்பட்ட 12 வாகன அனுமதிப்பத்திரங்கள், 08 தேசிய அடையாள அட்டைகள், கல்வி சான்றிதழ்கள், முத்திரைகள், மடிக்கணினி, 03 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேவலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.