தடுப்பூசி பணி முடியும்வரை நாடு முடக்கமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
நாட்டில் தடுப்பூசிபணி செலுத்தி நிறைவடையும் வரை, நாடு முடக்கப்படும் என கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். கொரோனா அச்சுறுத்தலான பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி எதிர்வரும் ஓரிரு தினங்களில் நிறைவு செய்ய முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.
இந்நிலையில் தற்பொழுது நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட சுமார் 96 வீதமானோர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஊசிக்கு அச்சம் கொண்ட சிலர் மட்டுமே இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எந்தவித அச்சமும் இன்றி, அவ்வாறான தரப்பினரும் விரைவில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறுm கோரிக்கை விடுத்துள்ள அவர், , தற்போது 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட தரப்பிற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட தரப்பிற்கு விரைவில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் தடுப்பூசி செலுத்தி நிறைவு செய்யும் சரியான திகதியை தற்போதைக்கு அறிவிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.