முதலாவது கொரோனா பாதிப்பை உறுதி செய்த நாடு! எப்படி பரவியது தெரியுமா?
கொரோனா வைரஸ் தொற்று பரவலானது கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகில் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை தீவு நாடான டோங்கா, (Tonga) தங்கள் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்று (CoronaVirus) பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்று (29) வெள்ளிக்கிழமை நியூசிலாந்திலிருந்து விமானம் மூலம் வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், டோங்காவில் பதிவான முதல் கொரோனா தொற்று இது என செய்தி ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தவிர்த்த சில உலக நாடுகளில் டோங்காவும் ஒன்று. இந்நிலையில் வானொலியில் பேசிய டோங்கா பிரதமர் Pohiva Tu'i'onetoa, நியூசிலாந்திலிருந்து டோங்கா வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (27) நியூசிலாந்தின் Christchurch நகரிலிருந்து விமானம் மூலம் டோங்கா வந்த பயணி ஒருவருக்கே தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.