உலகத் தலைவர்களின் ஊழல்கள் அம்பலம்; சிக்கலில் ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினர்!
உலக நாடுகளின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோ ஊழல்கள் தொடர்பிலான தகவல்களை , ‘பண்டோரா பேப்பர்ஸ்’ அம்பலப்படுத்தியுள்ளது. இதில் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான நிருபமா ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட 300 பேருக்கும் அதிகமானவர்கள் தொடர்பில்லான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் இரகசிய ஆவணங்கள், 2016ல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியான இந்த ஆவணங்களை, பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் பொன்செகா வெளியிட்டிருந்தது. இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றிருந்ததுடன் பல தனி நபர்கள், நிறுவனங்களின் முறைகேடுகள் இதில் வெளியாகின. இந்நிலையில் நேற்றையதினம் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகள்வில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பிலான இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
அதில், இதில் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் பற்றிய தகவல்களும் உள்ளன.
லண்டன் மற்றும் சிட்னி, அவுஸ்திரேலியாவில் ஆடம்பர குடியிருப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் சிங்கப்பூர் அறக்கட்டளை நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் உண்மையான பொருளாதார பயனாளிகள் என குறித்த ஊழல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அமைச்சர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும், அறக்கட்டளை என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், கென்யா ஜனாதிபதி உஹுரு உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சைப்ரஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடோர் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், விளையாட்டு பிரபலங்களும் செய்துள்ள முறைகேடுகள் குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.