யாழ்.மாவட்டத்தில் தேங்கும் சடலங்கள்; திணறும் சுகாதாரத்துறை
யாழ்.மாவட்டத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் சிக்கில உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாளாந்தம் ஐந்து சடலங்கள் என்ற அடிப்படையில் சடலங்கள் எரியூட்டப்படுவதால் இந்த சிக்கல் நிலவுவதாக தெரியவருகிறது. அதேபோல் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பாக வைப்பதிலும் பெரும் நெருக்கடி உருவாகியிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
அதன்படி கடந்த 2ஆம் திகதி உயிரிழந்தவர்களின் சடலங்களை எதிர்வரும் 09ம் திகதியே தகனம் செய்யமுடியும் என இன்று காலை தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் நாள் தோறும் ஐந்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன் அடிப்படையில் 30ற்கும் அதிகமானோரின் சடலங்கள் தேங்கியிருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ள வடக்கு சுகாதாரத் திணைக்களம், சடலங்களை தொடர்ந்தும் பராமரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.