தனியாக வசித்து வந்த பெண்ணொருவர் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!
ஹொரண - வேகட வீதியின் பெரண்டிய விகாரைக்கு அருகில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து 86 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (06) இடம்பெற்றுள்ளது.
மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களான தம்பதியினரின் குறித்த வீட்டில் சேவையாற்றி வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தம்பதியினர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த வீட்டில் கடமையாற்றிய உயிரிழந்த பெண் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் குறித்த வீட்டில் தனியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணிற்கு கொவிட் தொற்று உள்ளதா என உறுதி செய்வதற்காக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா வைரஸ் தீவிரமாக பரவி வருதால் வீடுகளில் தனியாக இருக்கும் வயதான பெற்றோர்கள், உறவுகள் குறித்து மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.



