பிரித்தானியாவில் 1 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
கொரோனா தொற்று பரவல் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது. இதேவேளை பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, போன்ற நாடுகளில் அதிகரித்துள்ளது. இதனால் இதைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 47,240 பேர் பாதிக்கப்பட்டதோடு 147 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 21 ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 44 ஆயிரத்து 433 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 இலட்சத்து 2ஆயிரத்து 99 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 928 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் 40,777 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 88 இலட்சத்து 74 ஆயிரத்து 965 பேர் குணமடைந்துள்ளனர்.