வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நபருக்கு கொரோனா தொற்று!
கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்கள் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்வது தொடந்தும் பதிவாகியுள்ளது.
அதன்படி, எம்பிலிபிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்கு முன்பே வைத்தியசாலையில் இருந்து நபரொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்ற நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் எம்பிலிபிட்டி நியூ டவுனில் உள்ள வீட்டில் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குட்டிகல தோரகல, பதலங்கல பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய நபருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காய்ச்சல் காரணமாக குறித்த நபர் 20 ஆம் திகதி எம்பிலிபிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.