இலங்கையில் பிரபல நாடக நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் பிரபல சிங்களத் தொலைக்காட்சி நாடக நடிகையான நயனதாரா விக்கிரமாராச்சிக்கு (Nayanathara Wickramarachchi) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில், தான் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும் , தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதாகவும் நயனதாரா கூறியுள்ளார்.
இதேவேளை, சமீபத்திய நாட்களில் தன்னுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொண்டு, கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.