இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு விடுத்த எச்சரிக்கை!
இலங்கையில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
அதற்கமைய நாட்டில் இதுவரையில் நூற்றுக்கும் அதிகமான பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கொவிட் பரவலால் இந்தியாவிலிருந்து பயணிகளை அழைத்து வருவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.