ஜேர்மனியை உலுக்கி எடுக்கும் கொரோனா: அதிகரிக்கும் உயிரிழப்புகள்
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 71 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டதோடு 415 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் இதுவரை மொத்தமாக 59 இலட்சத்து 53 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 2 ஆயிரத்து 552 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 9 இலட்சத்து 13 ஆயிரத்து 158 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 4,636 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜேர்மனியில் 44,300 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 49 இலட்சத்து 37 ஆயிரத்து 600 பேர் குணமடைந்துள்ளனர்.