அரையிறுதிக்கு முன்னர் புதிய சர்ச்சை: ஆடுகளம் மாற்றத்தை மாற்றியதா இந்தியா?
இந்திய நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண அரை இறுதிப்போட்டி இன்னமும் சில நிமிடங்களில் ஆரம்பமாக உள்ள நிலையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த ஆடுகளத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதியின்றி இந்தியா ஆடுகளத்தை மாற்றியதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன..
ஐசிசியின் போட்டி மைதானங்கள் அதன் ஆலோசகரான அன்டி அட்கின்சனின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.
உலக கிரிக்கெட் மைதானங்கள் குறித்து வேறு எவரையும் அதிகளவு விடயங்களை தெரிந்து வைத்துள்ளவர் என அட்கின்சன் புகழப்படுகின்றார்.
குற்றச்சாட்டு
ஒவ்வொரு போட்டிக்கும் எந்த ஆடுகளத்தை பயன்படுத்துவது என்பது குறித்து அவர் உள்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடன் இணக்கப்பாட்டினை எட்டுவார். இந்த நிலையிலேயே அவருடனான உடன்பாட்டினை இந்தியா மீறிவிட்டது என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் அரைஇறுதி போட்டிக்கு முன்னதாக வெளியாகியுள்ளன.
இன்றைய போட்டிக்கு பயன்படுத்தப்படவுள்ள ஆடுகளம் ஏற்கனவே இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக காணப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் வான்கடே மைதானத்தில் உள்ள 7 இலக்க ஆடுகளத்தை பயன்படு;த்துவது என தீர்மானிக்கப்பட்டது அது இதுவரை பயன்படுத்தப்படாத ஆடுகளம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இரண்டு தடவை விளையாடிய ஆறாவது ஆடுகளத்திலேயே இன்றைய போட்டி இடம்பெறும் என்ற வட்ஸ்அப் செய்தி வெளியாகியுள்ளது.