சர்ச்சைக்குள்ளான ப்ரோமோ; கடுப்பில் மணிமேகலை ரசிகர்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியின் நடுவராக தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் பங்கேற்க அர்ச்சனாவும் மகாபாவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இந்நிலையில் அர்ச்சனா உடல்நலக் குறைபாடு காரணமாக தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மணிமேகலை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில், சீரியல் நடிகர் யோகேஷ் அம்மா மணிமேகலையை கலாய்க்கிறேன் என்ற பெயரில் உருவ கேலி செய்துள்ளார்.
இதனை மணிமேகலை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் இந்த புரோமோ விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் அம்மா ஒல்லியாக இருக்கிறார். அப்படி இருக்கையில் அவர் மணிமேகலையின் உருவத்தை கேலி செய்தது மணிமேகலை ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பலரும் அந்த ப்ரோமோ வீடியோ தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.