நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்த சர்ச்சை போதகர்!
மதங்களை நிந்தித்மைக்காக சிஐடி விசாரணையை எதிர்கொண்டுள்ள போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவிற்கு நாட்டிலிருந்து வெளியேற நீதிமன்றம் நேற்று தடை விதித்தபோதிலும் அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளதாக ஜெரோம் பெர்ணாண்டோ தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ பணிகள் தொடர்பில் வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில் சர்ச்சை கருத்து
இந்நிலையில் மே 14 ம் திகதி அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மதநிகழ்வொன்றில் பொதுமக்கள் முன்னிலையில் புத்தர் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தினை நிந்தனை செய்யும்வகையில் அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அது தொடர்பில் விசாரணையை தொடங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.