ஆர்பாட்டத்திற்கு என்னிடம் கேட்கவில்லை!! வெடுக்குநாரிமலை மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்துக்கு வரமுடியாது என்று கூறிய சாணக்கியன்
வெடுக்குநாரிமலையில் நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்துகொள்ளச்சென்ற பக்தர்களை மிரட்டியது, கைதுசெய்தது, தாக்கியது உட்பட அவர்களின் மத வழிபாட்டுக்கு இடையூறுசெய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மட்டக்களப்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்துகொள்ளவில்லை.
வாகரையில் உள்ள ஒரு பாடசாலை நிகழ்வில் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே சம்மதித்திருந்ததால் தன்னால் ஆர்ப்பாட்டத்திற்கு வரமுடியாது என்று கூறிய சாணக்கியன், அடுத்ததாகக் கூறிய ஒரு விடயம்தான் வேடிக்கையானது.
'மட்டக்களப்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு முன்னர் தன்னையும் தொடர்புகொள்ளவேண்டும்' என்கின்ற தொணியில் சாணக்கியன் தெரிவித்திருந்த விடயம்தான் தற்பொழுது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் மக்களின் மத வழிபாடு குழப்பப்பட்ட மறுதினம் அந்த அநீதிக்கு எதிராக மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
தன்னிடம் கேட்டுத்தான் எந்த ஒரு ஆர்பாட்டமும் மட்டக்களப்பில் நடக்கவேண்டும் என்ற சாணக்கியனின் நிலைப்பாடு மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
மக்களின் உணர்வுகளுடன் கூடிய ஆர்பாட்டங்களை வெறுமனே அரசிலாக மட்டுமே அனுகிவருகின்ற சாணக்கியன் போன்ற ஒரு இளம் அரசியல்வாதி தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றார்கள் தமிழ் மக்கள்.
மக்களால் நடாத்தப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டிவரை ஊர்வலத்தில் தன்னுடைய உருவப்படம் பொதிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியபடி சென்று மல்லினமான அரசியல் செய்த சாணக்கியன், கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக யாழில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த வேலன் சுவாமிகளை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்ட சாணக்கியன், மட்டக்களப்பில் நடைபெறுகின்ற அத்தனை ஆர்ப்பாட்டங்களையும் தனது அரசியல் அஜன்டாவுக்காகப் பயன்படுத்தும் போக்கை தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறுனார் தமிழரசுக் கட்சியின் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.







