பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் போட்டியாளர்கள் இடையில் நடந்த சர்ச்சைக்குரிய உரையாடல்
தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன் தற்போது ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.
பிக்பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் என்று வந்து விட்டால் தீப்பறக்கும் அதே வேளையில், சில போட்டியாளர்களும் வார இறுதியில் வெளியேறி இருந்தனர்.
21போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டுமென அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார்.
இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி உள்ளனர்.
கடந்த வாரம் நிவாஷினி வெளியேறியதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த நாமினேஷன் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.
சக போட்டியாளர்கள் மத்தியில் தாங்கள் எலிமினேஷன் சுற்றுக்கு நாமினேட் செய்யும் 2 போட்டியாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டும். அதன்படி, பலரும் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளர்கள் பெயரை தெரிவித்து இருந்தனர்.
புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொரு வழக்கும் விறுவிறுப்பாக சென்ற வண்ணம் உள்ளது.
இவ்வாறு இருக்கையில் இரவு நேரத்தில் அமுதவாணன், ஷிவின், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பேசிக் கொண்டிருந்த விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.
அப்போது விக்ரமன் மற்றும் ஷவின் பற்றி அவர்கள் பேசி கொண்டிருக்க, "உன் ஆளு விக்ரமன்னு தெரியும்" என தனலட்சுமி ஷிவினிடம் கூற, ஜனனியும், "உன் லவ்வர் விக்ரமன்னு தெரிஞ்சு போச்சு" என்கிறார்.
மேலும் இது தொடர்பான கருத்து நீண்டு கொண்டே போக, அமுதவாணன் ஜனனிக்கு அண்ணன் மாதிரி தானே என கூறிக் கொண்டு, அதனை அமுதவாணன் மற்றும் ஜனனியிடம் நேரடியாக கேட்டு ஆமாம் என நிரூபிக்கும் தனலட்சுமி, அதே போல உனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு என்ன என ஷிவினிடம் கேட்கிறார்.
இருப்பினும் இதற்கு ஷிவினும், அவர் எனக்கு அண்ணன் மாதிரி என கூற, "வாங்கோண்ணா, போங்கோண்ணா அந்த மாதிரி அண்ணாவா?" என சிரித்துக் கொண்டே கேட்கிறார் ஜனனி.
அத்தோடு ஷிவின் தன்னை தான் அண்ணன் என கூறுவதாக அமுதவாணன் விளக்க, "இல்லை, விக்ரமனை தான் அப்படி சொல்கிறார்" என ஜனனி விளக்கம் கொடுக்கிறார்.
இதற்கிடையே பேசும் தனலட்சுமி, "வெளிய போய் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க" என சொல்கின்றார்.
#Dhan to #Shivin Un Aalu Vikraman nu Theriyum#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/0wOHN9jzgf
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 23, 2022