சர்ச்சைக்குரிய பயணம் ; வதந்திகளை மறுக்கும் நாமல்
கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கோரிக்கைகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
கென்யா தலைநகருக்கு திட்டமிட்ட விமானத்தில் பயணம் செய்ததாகவும், சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு உறுதிபடுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ கென்யாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானமொன்றை முழுமையாக முன்பதிவு செய்ததாக கூறப்பட்டது. இந் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் கென்யாவுக்கான விஜயத்தின் போது அவர் விளையாட்டு, சுற்றுலா மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.