பாடப்புத்தகத் தயாரிப்பில் அலட்சியம் ; 6ஆம் தர ஆங்கிலப் பாடத்தில் சர்ச்சை
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடத்திற்கான கற்றல் தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறித்த தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த கற்றல் தொகுதியை விநியோகிக்கும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தவறு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தேசிய கல்வி நிறுவனம் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று (31) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.