தமிழர் பகுதியில் பதற்றம் ; மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு
மன்னார் உயிலங்குளம் பகுதியில் பொலிஸ் சிவில் சீருடைக்கு ஒத்த சீருடையுடன் வருகை தந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் நபர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம் பெற்றுள்ள நிலையில் உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட வில்லை.
எனினும் குறித்த துப்பாக்கி சூட்டில் இறந்த நபர்களுடன் சம்மந்தப்பட்ட நபர் மீதே இன்றைய தினம் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.