தொடர் உண்ணாவிரத போராட்டம்; 7 இலங்கைத் தமிழர்கள் விடுவிப்பு!
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இருந்து புதன்கிழமை (ஏப்.5) 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வைத்து பராமரித்து வருகிறது.
சிறப்பு முகாமில் 117 பேர்
அதில் இலங்கை, கம்போடியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 117 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் உள்ள பெரும்பாலானவர்கள் மீது இன்று வரை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறப்பு முகாம் வாசிகளில் ஏழு பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.