விடுதலைப் புலிகளுடன் தொடர்பா? பிரதமர் மஹிந்தவின் நண்பர் தெரிவித்த தகவல்
தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு தமிழரை விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்துவது எவருக்கும் எளிதானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) நெருங்கிய நண்பரும், உகண்டாவிற்கான இலங்கையின் முதலாவது உயர்ஸ்தானிகருமான வேலுப்பிள்ளை கணநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்தது,
நாட்டிலுள்ள சமூக ஊடகங்கள் உங்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டிருந்தன. வாசகர்களின் நலனுக்காக இதைப் பற்றி கொஞ்சம் வெளிச்சம் போட முடியுமா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் பதில் வழங்கிய அவர்,
“நான் எனது தாய்நாட்டின் உண்மையான தேசபக்தர் - இலங்கை மற்றும் எனது நாட்டை எவ்வளவு உண்மையாக நேசிக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் நான் அதை செயலில் நிரூபித்துள்ளேன்.
அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக எனக்கு எதிரான ஒரு அவதூறு பிரசாரமாக இதை நான் பார்க்கிறேன்.
மேலும், ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்யும் வகையில் அவர்களின் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்து மற்றும் பேச்சு எவ்வளவு கொடூரமானது என்பதைக் கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என அவ் கூறினார்.