குளித்து கொண்டிருந்த பெண்ணை படம் பிடித்த கான்ஸ்டபிள்
குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியலறையில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் குளித்து கொண்டிருந்தார்.

விளக்க மறியலில் வைக்க உத்தரவு
இதனை அதே பொலிஸ் நிலையத்தில் கான்ஸடபிள் மறைந்திருந்து தனது ஸ்மார்ட் போனால் படம் பிடித்து வைத்திருந்துள்ளார்.
இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து விசாரணைகள் தொடரப்பட்டு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதான சந்தேகநபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
இதன்போது இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி பிரபுதிகா நாணயக்கார சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள்ளை வரும் 9 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        