கட்டுத் துப்பாக்கி வெடித்து கான்ஸ்டபிள் காயம்
கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஊவா பரனகம யாழகமுவ பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் இடமேகம, அம்பகஸ்தோவ , ஊவா பரனகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் (சாரதி) ஒருவரே என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழகமுவ வனப்பகுதி சுற்றிவளைப்பு
ஊவா பரனகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் குழுவினர் யாழகமுவ வனப்பகுதிக்கு சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொள்வதற்காக சென்ற வேளையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மிருகங்களை வேட்டையாட கட்டப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் குறித்த கான்ஸ்டபிள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தினால் கான்ஸ்டபிளின் இடது முழங்காலில் காயமேற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைகளுக்காக வெலிமடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.