சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை: நல்ல பலன்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!
ஜோதிடத்தில், எந்த ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை இடம்பெற்றாலும், அந்த சேர்க்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
காதல் விவகாரங்கள், வசதிகள், திறமைகள் மற்றும் செல்வம் போன்றவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறது.
ஆன்மா மற்றும் தைரியம் போன்றவற்றின் காரணியாக சூரியன் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுக்கிரன் சிம்மத்தில் இணைகிறார்.
இந்த இரு கிரகங்களின் சேர்க்கையால் பல ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். சுக்கிரன் சூரியன் சேர்க்கையால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம் : சிம்மத்தில் சுக்கிரனும் சூரியனும் இணைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வித சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். கௌரவம் உயரும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். நீங்கள் பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதியான, மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையே உறவு வலுப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்: சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகபெரும் அளவில் பலனளிக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள்.
பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் முன்மொழியும் பல திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்து அவை வெற்றிகரமாக நடந்து முடியும். இந்த காலகட்டத்தில் அதிகப்படியான வெற்றிகள் உங்களை தேடி வரும்.
துலாம்: இரண்டு பெரிய கிரகங்களின் சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கூடும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தால், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும்.
புதிய வணிகத்தை துவக்க இது நல்ல நேரமாக இருக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது நிறைவடையும். முதலீடு செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள் இப்போது அதை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.