ஐதேகவில் மோதல்; ருவன், அக்கில விலகல்?
ஐ. தே. கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் சாகல காரியவசம் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தனவும் கட்சியின் உப தலைவரான அக்கிலவிராஜ் காரியவசமும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருப்பதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிநிலை முறைக்கமைய, அந்தந்த பதவிகளுக்கு கட்சி யாப்பின் படி வழங்கப்படும் அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை மீறி வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் செயற்படுவதே இந்த நிலைமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
இதுகுறித்து கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ள கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் உப தலைவர் அக்கிலவிராஜ் காரியவசம் ஆகியோர், வஜிர அபேவர்தனவும் சாகல ரத்நாயக்கவும் அநாவசியமான கட்சியை வழிநடத்த இடமளிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்க்குமாறு தலைவரிடம் ருவன் விஜேவர்தனவும்,அக்கிலவிராஜ் காரியவசமும் கேட்டுக் கொண்டிருப்பதோடு பிரச்சினைக்கு முடிவுகட்டும்வரை பணிகளிலிருந்தும் விலகியிருப்பதாக கூறியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.