இரு குழுக்களுக்கிடையில் மோதல்; இருவருக்கு நேர்ந்த கதி!
கொழும்பு - கல்கிசை, படோவிட்ட, முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு சமய நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர் படோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சமய நிகழ்வின் போது குறித்த இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நபர்களுக்கும், விளையாட்டை நடத்திக் கொண்டிருந்த நபருக்கும் இடையில் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மற்ற இருவரையும் கத்தியால் தாக்கி நிலையில் ஒருவர் பலியானதுடன், மற்றொருவர் படுக்காயமடைந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கல்கிசை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.