தேரர்களுக்கு இடையே மோதல்
விகாரையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட இரு புதிய தேரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதக தெரிய வந்துள்ளது.
இது பேராதனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
இம் மோதலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகிவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 24 வயதான தேரர் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிக்கு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 16 வயதான தேரர் (பிக்கு மாணவர்) பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவம் 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.