நடத்துனரின் மோசமான செயல் ; நையப்புடைத்த பயணிகள்
பயணியொருவரின் பணப்பையை பணப்பையை திருடிய குற்றச்சாட்டில் பஸ் நடத்துனர் பயணிகளால் நையப்புடைக்கபப்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுளளார்.
மொரட்டுவை மற்றும் புறக்கோட்டைக்கு இடையிலான இலக்கம் 101 பயணிகள் பஸ்ஸில் பணப்பையை பஸ் நடத்துனர் திருடியதை மற்றைய பயணியொருவர் கண்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இதனை மற்ற பயணிகளிடம் தெரியப்படுத்தியதை அடுத்து நடத்துனரை பயணிகள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
நடத்துனர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், பயணிகளின் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மொரட்டுவை நோக்கி பயணித்த கம்பஹா பகுதியைச் சேர்ந்த பயணியின் பணப்பையே திருடப்பட்டுள்ளது.
இவ்நிலையில் இதுபோன்ற முன்பு இடம்பெற்ற சம்பவங்களில் நடத்துனருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.