இலங்கையில் ஆணுறைகளின் விலை ; புதிய அறிவிப்பு
இலங்கையில் ஆணுறைகளின் விலை உயரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு போர் காரணமாக ஆணுறைகளின் விலை உயரும் அபாயம் இருந்தபோதிலும் இலங்கையில் ஆணுறைகளின் விலைகள் உயரப்போவதில்லை என இலங்கை குடும்ப அமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை குடும்ப அமைப்பு சங்கம் நாட்டில் ஆணுறை விற்பனையில் 90 சதவீத பங்கைக் கொண்ட ஆறு வகையான ஆணுறைகளை விநியோகிக்கிறது.

கருத்தடை சாதனங்கள் இறக்குமதி
இந் நாட்டுக்கு தேவைப்படும் பெரும்பாலான கருத்தடை சாதனங்கள் தாய்லாந்து, இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
ஈரான் உட்பட மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஆணுறை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
அதேவேளை உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தியாளராகக் கருதப்படும் மலேசியாவின் கரெக்ஸ் பிஎச்டி, தனது தயாரிப்புகளின் விலையை 20 முதல் 37 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.