செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு நேர்ந்த நிலை
செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்வசதி வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியா தொடர்ந்து தலைநகரை கைப்பற்றும் திட்டத்துடன் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணு உலையான செர்னோபில்லையும் ரஷியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்வசதி வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இதன்படி மின் கட்டமைப்புகளை மீண்டும் சரி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனத்தெரிவித்துள்ள உக்ரைன், அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகள் மின் வசதியின்றி இருந்தால் கதிர்வீச்சு அதிகரிக்கும்.
ரஷியாவின் நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. மின் விநியோகத்தை மீட்டெடுக்க அனுமதிக்குமாறு உலக நாடுகள் ரஷியாவிடம் வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.