சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பயிர்ச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது விபரங்களை உடனடியாக அதிகாரிகளிடம் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பல விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், அனைத்து சேதங்களையும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தகவல்கள் கிடைத்தவுடன், குறுகிய காலத்திற்குள் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.