அனுர அரசின் எம்பி தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து ; முன்னாள் உறுப்பினர் கைது
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவீந்திர நம்முனி படகொட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
NPPயின் களுத்துறை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி நிலாந்தி கோட்டஹச்சிக்கு , இருபதாயிரம் ரூபாவை செலுத்தி ஹோட்டலுக்கு அழைத்து சென்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே களுத்துறை மில்லனிய பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) முன்னாள் உறுப்பினர் ரவீந்திர ரம்முனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.