15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல்; யாழில் கலந்துரையாடல்

Jaffna Mullaitivu Mullivaikal Remembrance Day Sri Lanka Final War
By Sulokshi Apr 22, 2024 05:20 AM GMT
Report

  எதிர்வரும் மே மாதம்-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.04.2024) மாலை-04 மணியளவில் சிவில்-சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல்; யாழில் கலந்துரையாடல் | Commemoration Of Mullivaikal Civil Discussion

 புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வலியுறுத்தல் 

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பசில் ராஜபக்ச வீட்டிற்கு இப்படி ஒரு நிலையா? அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

பசில் ராஜபக்ச வீட்டிற்கு இப்படி ஒரு நிலையா? அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

இந்தக் கலந்துரையாடலில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலைப் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்தி மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல்; யாழில் கலந்துரையாடல் | Commemoration Of Mullivaikal Civil Discussion

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நினைவேந்தல் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்து கொண்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் பேரவலம் 15 ஆவது ஆண்டாக நினைவு கூரப்படவிருக்கின்றது. இந்த நினைவேந்தல் மிகவும் முக்கியமானது. இந்த நினைவேந்தலை நாங்கள் பரவலாக்கம் செய்ய வேண்டும்.

19 வயது யுவதியின் உயிரைப்பறித்த விபத்து; சாரதி தப்பியோட்டம்

19 வயது யுவதியின் உயிரைப்பறித்த விபத்து; சாரதி தப்பியோட்டம்

இந்த நினைவேந்தல் மூலம் மீள நிகழாமை உறுதி செய்யப்பட வேண்டும். காஸாவில் தற்போது இன்னுமொரு மனிதப் பேரவலம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட அவலம் மீண்டும் நடைபெறாமலிருப்பதை மனதிலே கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாங்கள் முக்கியத்துவப்படுத்த வேண்டும். இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒரு இடத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தி வைக்காமல் பரந்த அளவில் எல்லோரும் இயல்பாக நினைவேந்தலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு நீடித்த நினைவேந்தலாக, ஒரு இன அழிப்பின் நினைவேந்தலாக எவ்வாறு மேற்கொள்ளலாம்? என்பதைக் கிராம மட்டப் பொது அமைப்புக்கள் தீர்மானித்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US