யாழில் தமிழர்களுக்காக குரல் கொடுத்த சிங்களவருக்கு நினைவு தினம்
மறைந்த நவ சமய கட்சியின் தலைவரும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவருமான விக்ரமபாகு கருணாரட்னவின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவு தினம், இன்று (05.08.2024) தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், விக்ரமபாகு கருணாரட்னவின் திருவுருவப்படத்திற்கு பொது மக்களால் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் சுடரேற்றி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுதுரை ஐங்கரநேசனால் பொதுத் தேர்தல் தொடர்பிலும் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் கொள்கை தவறாது குரல் கொடுத்த விக்ரமபாகு கருணாரட்ன தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகை தொடர்பான விடயங்களும் நிகழ்வில் பேசப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் இரேனியஸ், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பான ஆதரவு தொடர்பிலும் தேசிய இன பிரச்சனை தொடர்பிலும் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக உரையாற்றினார்.
அத்துடன், நவ சம சமயக் கட்சியின் பொதுச் செயலாளர் ரணத் குமார சிங்கவும் இதன்போது உரையாற்றியுள்ளார்.