யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இளைஞன்; பொலிஸார் அதிரடி
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாளுடன் இளைஞர் ஒருவர் இன்றைய தினம் (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞன் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞனின் வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார்.
தேடுதல் நடவடிக்கையின்போது, 20 போதை மாத்திரைகள், 12 கிராம் 370 மில்லிகிராம் அளவுடைய ஐஸ் போதைப்பொருள், 61 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் கூரிய வாள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதான இளைஞன் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.