கொமும்பில் நள்ளிரவிலும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோசம்போடும் இளைஞர்கள்!
கொமும்பில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் நள்ளிரவிலும் கோசம்போடும் புகைப்படங்களை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இலங்கை அண்மைக்காலமாக பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.

மேலும் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் கடந்த சில இரண்டு வாரங்களாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஜனாதிபதி, பிரதமர், உட்பட பல அமைச்சர்களின் வீடுகள், மற்றும் அலுவலகங்களை மக்கள் முற்றுக்கையிட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று நள்ளிரவு கொழும்பில் கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள் கோசம்போடு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை நிலவியுள்ளது.

