கொழும்பை அதிரவைத்த பல்கலைக்கழக மாணவி கொலை; வெளிவந்த பல பகீர் தகவல்கள்!(Video)
காதல் தகராறு காரணமாக கொழும்பு குதிரைப்பந்தய திடலில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய மாணவியே காதலனால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்த மாணவியும் மாணவர் ஒருவரும் காதலித்து வந்த நிலையியல் அண்மையில் மாணவி காதல் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகினறது .
இது தொடர்பில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காதலன் கூரிய ஆயுதத்தால் பட்டப்பகலில் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டான்.
இதனையடுத்து கைது செய்யப்படட காதலன், தன்னைவிட்டு மாணவி வேறு யாரையம் காதலிக்கக்கூடாது என்பதற்காகவே கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கொலை தொடர்பில் மேலதிக தகவல்கள் காணொளியில்.....