வெளிநாட்டு பிரஜையின் பொதியை திருடிய வாடகை கார் சாரதி ; 13 இலட்சம் ரூபாய் அபேஸ்!
வெளிநாட்டு பிரஜை ஒருவரின் பையை திருடியதாக கூறப்படும் வாடகை கார் சாரதி ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குவைத் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் பையே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

13 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய கார் சாரதி
வெளிநாட்டு பிரஜை டிசம்பர் 26 ஆம் திகதி குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் வாடகை கார் ஒன்றில் ஏறி கொழும்பு கோட்டையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
பின்னர், வெளிநாட்டு பிரஜை வாடகை காரினுள் தனது பையை விட்டுச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாடகை காரின் சாரதி பையில் இருந்த 13 இலட்சம் ரூபாய் பணத்தை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான வாடகை கார் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.