சிவஞானம் சிறீதரனை பதவியில் இருந்து விலக பணிப்புரை !
அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்றுமுன்தினம் 7ஆம் திகதியிட்டு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

பதவியில் தொடர்வது உங்களுக்கும் சங்கடம்
இது தொடர்பான கடிதத்தைப் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்திருக்கின்றார் .
அரசமைப்பு கவுன்ஸிலில் சிறீதரனின் நடத்தை தொடர்பாக அரசியல் குழு ஆராய்ந்து கண்ட விடயங்களை இந்தக் கடிதத்தில் சுமந்திரன் விலாவாரியாக விவரித்திருக்கின்றார் எனத் தெரிகின்றது.
இந்தப் பின்புலத்தில் இந்தப் பதவியில் தொடர்வது உங்களுக்கும் சங்கடம். கட்சிக்கும் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆகையினால் மேற்படி பதவியில் இருந்து விலகுவதன் மூலம் தங்களுக்கும் கட்சிக்கும் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்'' - என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அடுத்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து கட்சிக்கு அறிவுக்குமாறு சுமந்திரன் கடித்தத்தில் குறிப்பிட்டுள்லதாகவும் தெரியவருகின்றது.