காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி!
இலங்கையில் நடைபெறும் லங்கா பிரிமியர் லீக் டி20 தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
மேலும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
காலி கிளாடியேட்டர்ஸ் சார்பில் அவுஸ்திரேலிய வீரர் பென் டங்க் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மேலும் பந்துவீச்சியில் இலங்கை அணி சார்பில் அகிலா தனஞ்செய, துஷ்மந்த சமீரா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதற்கமைய, 117 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்குடன் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இழக்கை அடைந்தது.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் அதிகப்பட்சமாக தினேஷ் சன்டிமால் 26 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 24 ஓட்டங்களை டேவிட் வைஸ் 22 ஓட்டங்களை, பெற்றனர். காலி கிளாடியேட்டரஸ் அணியில் பந்துவீச்சி சார்பில் நுவன் துஷாரா, புலின தரங்கா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மேலும் 2 விக்கெட்டுக்களையும் துடுப்பாட்டத்தில் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட தனஞ்சய டி சில்வா போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.