கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்: ஓடும் பேருந்தில் நடத்துனரால் பயணிக்கு நேர்ந்த கொடூரம்!
கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர், பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (17-12-2023) ஞாயிற்றுகிழமை மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் போது நடத்துனர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பயணி நேற்று நாவின்ன பகுதியிலிருந்து தனியார் பேருந்தில் ஏறி கொடகம வரை பேருந்திற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் நின்றுள்ளார்.
அப்போது, பேருந்தின் பின்புறம் செல்லுமாறு நடத்துனர் பலமுறை பயணியிடம் கூறியதாகவும், வாக்குவாதத்தின் போது, நடத்துனர் பயணியை தாக்கி காதைக் கடித்து விழுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஹோமாகம நகரை அண்மித்த போது குறித்த பயணியின் காது பகுதி காணவில்லை என குறித்த இளைஞருக்கு மற்றுமொரு பயணி தெரிவித்துள்ளார்.
அப்போது, குறித்த பயணி, மெகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்தி, காதின் ஒரு பகுதி காணாமல் போயிருப்பதை அறிந்து, மெகொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை, பேருந்தில் மறைந்திருந்த நடத்துனர் மெகொட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து காயமடைந்த பயணியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாக மெகொட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின்போது, கொழும்பு, அவிசாவளையில் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.