கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நீடிப்பு!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தின் பார்வையிடும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக தாமரைக்கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தாமரை கோபுரம் இம்மாதம் மாதம் 25 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 26 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை திறந்திருக்கும். அத்துடன், இவ்வருட இறுதி நாளான 31 ஆம் திகதி காலை 9.00 முதல் 2025 ஆம் ஆண்டின் ஆரம்ப நாளான ஜனவரி மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 1 மணிவரை திறந்திருக்கும்.
மேலும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி காலை 9.00 முதல் 2 ஆம் திகதி அதிகாலை 1 மணிவரை திறந்திருக்கும் எனவும் தாமரைக்கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது..