இலங்கை விமான நிலையத்தில் தீடிரென தடுத்து நிறுத்தப்பட்ட வெளிநாட்டு விமானம்!
இலங்கையின் சர்வதேச வினாம நிலையமான கட்டுநாயக்கவில் இருந்து ரஷ்யாவுக்குத் திரும்பும் விமானத்தை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனயடுத்து இன்று (02-06-2022) நண்பகல் முதல் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Aeroflot Airlines விமானம் SU-288 இன்று காலை 10.10 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இன்று (02-06-2022) மதியம் 12.50 மணிக்கு மீண்டும் மொஸ்கோவிற்கு விமானம் புறப்படவிருந்தது.
இந்தற்காக 200க்கும் மேற்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய இடம்பெயர்வு பிரிவின் தலைவருக்கு குறித்த விமானத்தை விமான நிலையத்திலிருந்து புறப்படுவதை தடுக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விமானத்திற்கு வரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானப்படை தலைமை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், ஏரோஃப்ளோட் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.