கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்: வெளியான பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!
கொழும்பு - ஜம்பட்டா வீதியில் நபரொருவரை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் அவருக்கு உதவிய மூவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 25-02-2024 ஆம் திகதி ஜம்பட்டா வீதியில் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், துப்பாக்கி எடுத்துச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கியை மறைத்து வைப்பதற்காக குறித்த முச்சக்கரவண்டிக்கு துப்பாக்கியை வழங்கிய விதம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய அந்த பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் சில்வாவின் மேற்பார்வையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ரேணுக சதுரங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.