கொழும்பு - யாழ் போக்குவரத்து சேவை... பயணிகளை தொடர்ந்து ஏமாற்றும் பேருந்துகள்!

Jaffna Sri Lankan Peoples
By Shankar Dec 22, 2024 01:52 PM GMT
Shankar

Shankar

Report

கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் விடுதியொன்றில் மோசமான செயலில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் சிக்கினர்!

வவுனியாவில் விடுதியொன்றில் மோசமான செயலில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் சிக்கினர்!

கொழும்பு - யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக சில பேருந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு - யாழ் போக்குவரத்து சேவை... பயணிகளை தொடர்ந்து ஏமாற்றும் பேருந்துகள்! | Colombo Jaffna Bus Service Deceive Passengers

எனினும் அந்த பேருந்துகளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணிகள் மதவாச்சி அல்லது வவுனியா பகுதிகளில் இறக்கி விடப்படுகின்றனர்.

இவ்வாறு இறக்கி விடும்போது "பின்னால் வேறு பேருந்து வருகின்றது. நீங்கள் அந்தப் பேருந்தில் யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கலாம். அந்த பேருந்துக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை" நடத்துனரால் என கூறப்படுகிறது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

கொழும்பிலிருந்து பயணச் சீட்டுகள் யாழிற்கு என பதிவு செய்யப்பட்ட பின்னர் சிலவேளைகளில் கொழும்பில் இருந்து வவுனியா அல்லது மதவாச்சி பகுதிக்கான கட்டணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு மிகுதி பணம் மீளவும் பயணிகளிடம் வழங்கப்படுகின்றது.

கொழும்பு - யாழ் போக்குவரத்து சேவை... பயணிகளை தொடர்ந்து ஏமாற்றும் பேருந்துகள்! | Colombo Jaffna Bus Service Deceive Passengers

பயணிகள் அடுத்த பேருந்து வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

மேலும், கொழும்பிலிருந்து யாழிற்கான பயணப்பாதை கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் என்றே காணப்படுகிறது.

2025 ஆம் ஆண்டின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்! இத்தனை விடுமுறையா?

2025 ஆம் ஆண்டின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்! இத்தனை விடுமுறையா?

எனினும், இவ்வாறு இடையில் இறக்கி விடுகின்ற பேருந்துகளின் பயணப்பாதையானது கொழும்பு, குருணாகல் தம்புள்ளை ஊடாக மதவாச்சி அல்லது வவுனியா வரை செல்கிறது.

கொழும்பு - யாழ் போக்குவரத்து சேவை... பயணிகளை தொடர்ந்து ஏமாற்றும் பேருந்துகள்! | Colombo Jaffna Bus Service Deceive Passengers

இந்த பயணப்பாதையானது மிக நீண்ட தூரமாகும். இன்றையதினம் (22) கொழும்பிலிருந்து யாழிற்கு செல்வதற்காக பயணிகள் சிலர் ND-0632 என்ற இலக்க தனியார் பேருந்தில் ஏறி பயணத்தை ஆரம்பித்தனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டில் கொழும்பு - வவுனியா என சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது என்பதுடன் 1763 ரூபா கட்டணம் அறவிடப்படப்பட்டது.

வவுனியாவில் திடீரென நிலவும் காலநிலை... பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

வவுனியாவில் திடீரென நிலவும் காலநிலை... பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

ஆனால் அந்த பேருந்தில் கொழும்பு - யாழ்ப்பாணம் என்றே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் அந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லாது என்று பேருந்தின் நடத்துனர் கூறியதுடன், அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் பயணித்த வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து வேறு ஒரு அரச பேருந்தில் ஏற்றி வைக்கப்பட்டனர்.

இந்த பேருந்தில் பயணித்த பயணிகள் கொழும்பிலிருந்து வவுனியா வரை 7 மணித்தியாலங்களும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இரண்டரை மணித்தியாலங்களும் என மொத்தமாக 9 1/2 மணித்தியாலங்கள் செலவழிக்க வேண்டி ஏற்பட்டது.

எனினும், யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் உண்மையான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் 7 அல்லது 7 1/2 மணத்தியாலங்களே பயணத்திற்கு செலவிட வேண்டிய தேவை உள்ளது.

மேற்படி மோசடியில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் தேவையற்று நேரத்தை செலவழிக்க வேண்டிய தேவை ஏற்படுவதுடன் சில பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தமது பணத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த செயற்பாடுகள் உரிய அதிகாரிகளுக்கு தெரிந்து நடக்கின்றதா அல்லது தெரியாமல் நடக்கின்றதா என்ற கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன. 

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US